×

பலா விற்பனை அமோகம்

அரூர்: கம்பைநல்லூரில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் கூடும் வாரச்சந்தை பிரசித்தம். நேற்றைய சந்தையில் மளிகை, காய்கறிகள் மற்றும் ஜவுளி உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விற்பனை சூடுபிடித்தது. சுற்றுப்புறத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பொருட்கள் வாங்குவதற்காக சந்தையில் குவிந்தனர். பலா சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால், ஜவ்வாது மலை, ஏலகிரி மலை, கொல்லிமலையில் இருந்து பழங்களை விற்பனைக்காக கொண்டு வந்து குவித்தனர். அளவை பொறுத்து ஒரு பழம் ₹100 முதல் ₹250 வரையிலும் விற்பனை செய்யப்பட்டது. ருசி மிகுந்த பழங்களை சந்தைக்கு வந்தவர்கள் போட்டி போட்டுக்கொண்டு வாங்கிச் சென்றனர்.

The post பலா விற்பனை அமோகம் appeared first on Dinakaran.

Tags : Jack ,Aroor ,Kampainallur ,
× RELATED 125 மூட்டை மஞ்சள் ₹12.5 லட்சத்திற்கு ஏலம்